சிவபெருமானும், தில்லை அம்மனும் ஆடிய நடனத்தைக் காண இங்கு வந்த மகாவிஷ்ணு இங்கேயே ஸேவை சாதித்ததாக ஐதீகம். நடராஜர் கோயிலுக்குள்ளே அமைந்திருந்தாலும் தனி இராஜகோபுரம், கொடிமரம் என எல்லாம் அமைந்துள்ளன.
மூலவர் 'கோவிந்தராஜன்' என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிடந்த திருக்கோலம், யோக சயனத்தில், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் 'தேவாதிதேவன்' அமர்ந்த கோலத்தில் ஸேவை. தாயார் 'புண்டரீகவல்லி' என்று வணங்கப்படுகின்றார். பதஞ்சலி முனிவர், வியாக்ரபாத முனிவர், கண்வ மகரிஷி, தில்லை மூவாயிரவர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
குலசேகராழ்வார் 11 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 21 பாசுரங்களுமாக மொத்தம் 32 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|